Friday, October 5, 2012

பீட்ரூட் கறி


 

பீட்ரூட் கறி

 
 

அவசியமான பொருட்கள் :

 
பீட்ரூட் - 2
வெங்காயம் - 1
    கடுகு - அரை தேக்கரண்டி
    உளுந்து - 3/4 தேக்கரண்டி
   கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்- 1/2 மூடி
பச்சை மிளகாய் - 2
சோம்பு -ஒரு தேக்கரண்டி

செய்முறை:



 
 
tamil
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும்
கடுகு  ,கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து.
 
 
 
பெருங்காயம் ,வெங்காயம் ,உப்பு சிறிது போட்டு வதக்கவும்.
 
வதங்கியவுடன்  பீட்ரூட்டை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கலந்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
அவசியபட்டால் தண்ணிர் சிறிது தொளித்து முக்கால் பகம் வரை வேகவைக்கவும்
 
 
 
அரைக்க வேண்டியவைகளை அரைத்து கொள்ளவும்.
 
 
அரைத்தவைகளை பேட்டு கிளறி மூடி போட்டு ஒரு
5 நிமிடம் பச்சைவாசனை போகும் வரை
வேக விடவும் .
அடுப்பை அணைத்து எடுத்து விடவும்
பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை கொத்தமல்லியை
 கலந்து பரிமாறவும்.
 
சாம்பார்  சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற ஜோடி.
குழந்தைகளுக்கு நெய்சாதத்துடன் கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள்.
 
 
 

No comments:

Post a Comment